காவலர் தேர்வில், முதற்கட்டமாக நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு உடல்திறன் தகுதி பயிற்சி முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் தேர்வில், முதல் கட்டமாக எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான உடல்திறன் தகுதிப் பயிற்சி முகாம் தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்டப் பிரிவு சார்பில், நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 15 நாள்களுக்கு நடைபெறும் பயிற்சி முகாமில் பல்வேறு உடல் திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதன் மூலம், தங்களது திறமைகளை மேம்படுத்தி காவலர் தேர்வை திறமையுடன் மேற்கொள்ள முடியும் என பயிற்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த பயிற்சி முகாமில் ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.