போட்டோ ஷூட் மட்டுமே எடுக்கிறார் ஸ்டாலின் – எதிர்க்கட்சித் தலைவர்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசினை ஆதரித்து கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இரண்டாம் கட்ட சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வெற்றிச் சின்னமான இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு வாக்களர்களைக் கேட்டுக்கொண்டார்.

விடியா திமுகவின் ஆட்சியில் ஸ்டாலின் போட்டோ ஷூட் செய்வதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார். மேலும் மக்களை கவரும் விதமாக 520 வாக்குறுதிகளை கூறி ஆட்சியில் அமர்ந்து அதில் ஒன்றைகூட சரியாக நிறைவேற்றவில்லை. மாறாக அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த மக்கள் நலன் திட்டங்களை செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்துவிட்டார்கள். மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக. குடும்பத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி திமுக. தன்னுடைய குடும்ப நலனில் மட்டும் அக்கறைக் காட்டிக்கொண்டு நாட்டு நலனை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் நமக்கு வாய்த்த முதல்வர். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் ரத்து என்று சொன்னார்கள். அதுவும் வாரிசு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் ரத்து செய்வது குறித்தான ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று கூறினார். அந்த ரகசியத்தை மக்களிடம் கூறினால்தான் என்ன? தெரிந்தால்தானே கூறுவார்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தலைவிரித்துவிட்டது. மூன்று நாட்களில் 15 உயிர்கள் பறிபோயிருக்கிறது. ஈரோடு கிழக்கில் மக்களை ஆடுகளை பட்டியில் அடைத்துவைப்பதுபோல வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். காசு கொடுத்து, சிக்கன் போட்டு, கொலுசு கொடுத்து, தற்போது ஸ்மார்ட் வாட்ச் கொடுத்து மக்களை தங்கள் பக்கம் இழுக்கிறார்கள் இந்த விடியா திமுகவினர். உலகத்திலேயே எந்தக் கட்சியும் இதுபோன்று காரியத்தில் ஈடுபட்டதில்லை. தமிழ்நாட்டில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுகவினுடையது. இப்படிப்பட்ட வரலாறுக்கு சொந்தக்காரர்கள் அவர்கள். ஆகவே ஈரோடு கிழக்கு மக்கள் திமுகவை தவிர்த்து வெற்றிச்சின்னமான இரட்டை இலையில் வாக்களித்து கழக வெற்றி வேட்பாளர் தென்னர்சு அவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று மக்களிடம் தெரிவித்தார் எதிர்கட்சித் தலைவர் அவர்கள்.

Exit mobile version