போட்டோக்களை விட்டுவிட்டு குழந்தைகளை காப்பாற்றிய தாய்க்கு தண்டனை!

வட கொரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், அந்த நாட்டின் உள்ள மறைந்த தலைவர்கள் ஆன கிம் இல் சுங் மற்றும் கிம் ஜாங் இல் ஆகிய இரண்டு பேரின் ஓவியப் புகைப்படங்களை வைத்திருப்பது கட்டாயம்.

இந்நிலையில், வடகொரியாவில் வசிக்கும் பெண் ஒருவரது வீட்டில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. அந்த நேரத்தில் அந்தப் பெண் வீட்டில் இல்லை. அவரது குழந்தைகள் மட்டும் தான் இருந்துள்ளனர். சம்பவத்தை அறிந்த பெண் உடனடியாக வீட்டிற்கு வந்துள்ளார். தனது குழந்தைகளை காப்பாற்றி வெளியே அழைத்து வந்துள்ளார். ஆனால் அந்த வீட்டில் இருந்த தலைவர்களின் புகைப்படங்கள் தீ பிடித்து எரிந்துள்ளது.

குழந்தைகளை காப்பாற்றி விட்டு போட்டோக்களை பாதுகாக்காத காரணத்திற்காக அந்தப் பெண்ணை கைது செய்துள்ளனர். அவரிடம் இது பற்றி விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதில் குற்றம் என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என அந்நாடு தெரிவித்துள்ளது

Exit mobile version