பிலிப்பைன்ஸ் நாட்டில்,பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்தால் இலவச அரிசி

பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் விதமாக ,பிலிப்பைன்ஸ் நாட்டில், பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து கொடுக்கும் மக்களுக்கு, அந்நாட்டு அரசு இலவச அரிசி வழங்கி வருகிறது…

உலகளவில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, எளிதில் மக்காத பிளாஸ்டிக்
கழிவுகள் கடலில் சேகரமாகின்றன. இதனை உண்ணும் கடல்சார் உயிரினங்களும் கடும்
பாதிப்புக்குள்ளாகின்றன. கடந்த 2015ம் ஆண்டு,கடல் சார்ந்த சுற்றுசூழல்
பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, அதிக பிளாஸ்டிக் வெளியேற்றும்
நாடுகளின் வரிசையில் பிலிப்பைன்ஸும் முன்னணி வகித்து வருகிறது.

மேலும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக மணிலா தலைநகர் அருகிலுள்ள பேயனான் கிராமத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்காக திட்டம் ஒன்றை அரசு அறிமுகம் செய்துள்ளது.

சாப்பாட்டுக்கு அரிசி வாங்க கூட சிரமப்படும் இந்த மக்கள்,
பயன்பெறும் விதமாக பிளாஸ்டிக் குப்பைகளுக்கு பதில் அரசு அரிசி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
. இத்திட்டத்தின் கீழ், இரண்டு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து
அரசிடம் ஒப்படைத்தால் , மக்களுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

இதனை வாங்கி அன்றாட பிழைப்பை நடத்த அந்த கிராம மக்கள் பெரிதும் ஆர்வம்
காட்டுகின்றனர். மக்களிடம் இருந்து சேகரிக்கும் இந்த குப்பைகளை அரசு
மறுசுழற்சியும் செய்துகொள்கிறது என்பது குறிப்பிடதக்கது.

Exit mobile version