இரண்டாம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர்.

அதன்படி, திருவள்ளூர் கிழக்கு-மேற்கு, திருவண்ணாமலை வடக்கு- தெற்கு, நாமக்கல், நீலகிரி ஆகிய இடங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், திருச்சி மாநகர்-புறநகர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர் வடக்கு- தெற்கு, நாகப்பட்டினம், மதுரை புறநகர் மேற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி தெற்கு ஆகிய இடங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version