தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கடந்த நவம்பர் மாதம்18-ந் தேதி தொடங்கியது.முதலில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றது. பின்னர், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நவம்பர் 23-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 10-ஆம் தேதியுடன் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது. இந்நிலையில், 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அதன்படி, 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டில் இன்னும் 12 இடங்கள் காலியாக உள்ளதால், இந்த12 இடங்களுக்கான கலந்தாய்வில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு நாளை முதல் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது.