வங்கக் கடலில், அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதற்கு பேய்ட்டி என்று பெயர் சூட்டப்படலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீண்டும் உருவாகும் இந்த புயல் சின்னம், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்பு புயலாக மாறும் என்றும், தமிழகம், ஆந்திர கடற்கரை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். புயல், முதலில் சென்னையை தாக்கும் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால், காற்று வீசும் திசையில் ஏற்பட்ட மாற்றத்தால், ஆந்திரா நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் தேதி புயலாக மாறி கடற்கரை நோக்கி நகர தொடங்கும் என்றும், 15 ஆம் தேதி கடற்கரையை அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. பின்னர், 16-ம் தேதி கரையை கடக்காமல் வலுவிழந்து ஒடிசாவுக்கு சென்றுவிடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, இன்று முதல் வடதமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் பட்சத்தில், நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து அதற்கு ‘பேய்ட்டி’ என பெயர் சூட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.