பேட்ட படத்தை இணையதளம் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிட தடை

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள பேட்ட படத்தை இணையதளம் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி ரஜினிகாந்த், சிம்ரம், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா நடிப்பில் பேட்ட திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை இணையதளம் மற்றும் கேபிள்களில் வெளியிட தடைவிதிக்கக் கோரி திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், பேட்ட படத்தை இணைதளம் மற்றும் கேபிள்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version