இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை உயர்வு!

தொடர்ந்து 17 நாட்களாக அதிகரித்து வரும் பெட்ரோல் விலை, இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. 82 நாட்கள் இடைவெளிக்கு பிறகு கடந்த 7ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து 17 நாட்கள் பெட்ரோல் விலை 8 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை 10 ரூபாய் 10 காசுகளும் அதிகரித்துள்ளன. இன்று பெட்ரோல் விலை 17 காசுகளும், டீசல் விலை 47 காசுகளும் உயர்ந்துள்ளதால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாய் 4 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் 76 ரூபாய் 77 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version