ஐந்து மாநில தேர்தல் முடிந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு

ஐந்து மாநில தேர்தல் முடிந்துள்ளநிலையில், பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. இதையடுத்து, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து 72 ரூபாய் 94 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு 68 ரூபாய் 26 காசுகளாகவும் விற்பனையாகிறது.

ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்தது வந்தது. இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி, அந்தந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்க அரசியல் கட்சிகள் தீவிரமாகி வரும்நிலையில், பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version