மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 72 ரூபாய் 99 காசுகளாகவும், டீசல் 68 ரூபாய் 10 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, கடந்த இரு மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் குறைந்து வந்தது.

தேர்தல் முடிவடைந்த நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரித்து 72 ரூபாய் 99 காசுகளாகவும் டீசல் விலை 8 காசுகள் குறைந்து 68 ரூபாய் 10 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version