பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் குறைவு !

பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் குறைந்து உள்ளது.

சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். இந்த நிலையில், சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 84 ரூபாய் 44 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் 79 ரூபாய் 15 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 7 நாட்களில் பெட்ரோல் விலை ஒரு ரூபாய் 66 காசுகளும், டீசல் விலை 89 காசுகள் குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version