சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
அதன்பின் சற்று குறைந்து விலை மாற்றமின்றி விற்பனையானது. இந்த நிலையில், கடந்த செவ்வாய் முதல் மூன்றாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து, 92 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது.
இதேபோல் டீசலின் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 86 ரூபாய் 35 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது.
3வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.