பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்து விற்பனையாகிறது. தொடர் விலை இறக்கத்தால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைத்து விற்கப்படுகின்றன. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 17 காசுகள் குறைந்து லிட்டருக்கு 73 ரூபாய் 84 காசுகளுக்கும் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து 36 காசுகள் குறைந்து லிட்டருக்கு 69 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.