சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்துள்ளது.

தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து பெட்ரோல் நிறுவனங்கள் வெளியிடுகின்றன. கடந்த வாரங்களில் மாற்றமின்றி தொடர்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை, கடந்த இரு தினங்களில் குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்து விற்பனை ஆகிறது. பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 50 காசுகள் குறைந்து லிட்டருக்கு 74 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. இதேபோல டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து 20 காசுகள் குறைந்து 70 ரூபாய் 06 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

Exit mobile version