பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகளும், டீசல் லிட்டருக்கு 31 காசுகளும் உயர்ந்துள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. இதையடுத்து, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் உயர்ந்து லிட்டர் 71 ரூபாய் 87 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 66 ரூபாய் 62 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version