சென்னையில் தங்கம் சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 19 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 775 ரூபாய்க்கும், சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 19 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 618 ரூபாய்க்கும், சவரனுக்கு 152 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி ஒரு கிராமுக்கு, 20 காசுகள் குறைந்து 48 ரூபாய் 80 காசுகளுக்கும், 1 கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து 48 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.