தினகரன் அலுவலதத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு- நீதிபதிகள் எச்சரிக்கை

மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ தாமதப்படுத்தினால், ஆவணங்களின் அடிப்படையில் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதான, 17 பேர் பின்னர், விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு விசாரணையை சிபிஐ தாமதப்படுத்த நினைத்தால், குற்றவியல் சட்டப்படி ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இதனால் வழக்கு விசாரணை, வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Exit mobile version