கள்ளக்காதலியை சந்திக்க குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய கொத்தனார்

கிராம மக்களின் கவனத்தை திசை திருப்பி, கள்ளக்காதலியை சந்திக்க குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய கொத்தனாரை காவல்துறையினர்  கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவருக்கு சொந்தமான மாங்காய் குடோன் உள்ளது. கடந்த 23-ந்தேதியன்று நள்ளிரவில் இந்த குடோன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் ரத்தினகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தீ பிடித்த எறிந்த மாங்காய் குடோனில் ஒரு பாட்டில் தென்பட்டது. இது காவல்துறைக்கு மிக பெரிய துருப்புசீட்டாக இருந்தது. அதனை அடிப்படையாக கொண்டு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பாட்டிலுடன் ஒருவர் பெட்ரோல் வாங்கிக்கொண்டு அங்கிருந்து செல்வது பதிவாகியிருந்தது.

அவரை பிடித்து விசாரித்ததில் அய்யம்பாளையம் அழகர்பொட்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம் என்பதும் கள்ளக்காதலியை சந்திப்பதற்காக குடோனில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

 தனது கள்ளக்காதலியை இருக்கும் பகுதியில் ஆள் நடமாட்டம் இருந்ததால் மக்களின் கவனத்தை திசை திருப்ப அருகில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு கூரையால் வேயப்பட்டிருந்த ரத்தினகுமாரின் மாங்காய் குடோனில் வீசினார்.

 மக்கள் தீயை கவனிக்க சென்றவுடன். இதனை சாதகமாக பயன்படுத்திய ராஜாங்கம் யாருடைய கண்களிலும் படாமல் தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று இரவில் தங்கி விட்டு சென்றிருக்கிறார். மறுநாள் காவல்துறையினர் விசாரணையில் சி சி டி வி கேமராவின் உதவியுடன் ராஜாங்கம் சிக்கியுள்ளார். இதனையடுத்து ராஜாங் கத்தை காவல்துறையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

Exit mobile version