கொலை வழக்கில் தொடர்புடைய முன்னாள் திமுக மண்டலத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு!!

மதுரையில் முன்னாள் திமுக மண்டலத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சப்பட்டது. அத்துடன், 10க்கும் மேற்பட்ட வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்த வி.கே.குருசாமி என்பவர் திமுக மண்டல தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் தற்போது கொலை வழக்கு மற்றும் ஆயுதங்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வி.கே.குருசாமியின் சகோதரியின் கணவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வி.கே.குருசாமியும் சிறையில் இருந்து வெளியே வந்திருப்பார் என நினைத்து, அவரது எதிரிகள் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். அத்துடன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் அவர்கள் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version