பெட்ரோல்-டீசல் விலை இன்றும் குறைவு !

பெட்ரோல்,விலை லிட்டருக்கு 22 பைசாவும் டீசல் லிட்டருக்கு ஒரு பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தங்கத்தை போல தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த பல மாதங்களாக தினமும் கடுமையான உயர்வை சந்தித்து வந்த பெட்ரோல்,டீசல் விலை இரண்டு வாரங்களாக குறைந்து வருகிறது.

இந்தநிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை, 22 காசுகள் குறைந்து 81 ரூபாய் 84 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை ஒரு காசு குறைந்து 77 ரூபாய் 55 காசுகளாக இருக்கிறது.

 

Exit mobile version