தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை கிடு கிடு உயர்வு!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோலின் விலை லிட்டருக்கு 90-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக காணப்பட்ட பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து, 90 ரூபாய் 18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து, 83 ரூபாய் 18 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 300 நாட்களில் 60 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version