சென்னையில் பெட்ரோல் விலை நான்காவது நாளாக அதிகரித்து லிட்டருக்கு 93 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது
5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர். அதன்படி சென்னையில் தொடர்நது நான்காவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. நேற்று பெட்ரோல் லிட்டர் 92 ரூபாய் 90 காசுகளுக்கும், டீசல் லிட்டர் 86 ரூபாய் 35 காசுகளுக்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து 93 ரூபாய் 15 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 86 ரூபாய் 65 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.