பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து இன்று 18 காசுகள், டீசல் நேற்றைய விலையிலிருந்து 21 காசுகள் அதிகரித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 73 ரூபாய் 41 காசுகளாக உள்ளது.

டீசல், நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 68 ரூபாய் 83 காசுகளாகவும் உள்ளது. கடந்த ஒரு மாதமாக குறைந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது சில நாட்களாக மீண்டும் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version