சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்து காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாறுப்பாட்டையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று சற்று குறைந்து காணப்பட்டது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு 73 ரூபாய் 90 காசுகளுக்கும் டீசல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு 69 ரூபாய் 61 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

Exit mobile version