4வது நாளாக ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை

அமெரிக்கா, ஈரான் இடையோயான தொடர் பிரச்னை காரணமாக, 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

ஈரானுடன் அமெரிக்கா தொடர்ந்து விரோதப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் ஈரான் குத்ஸ் படைத்தலைவர் காசிம் சுலைமானி, தலைநகர் பாக்தாத்திற்கு வந்திருந்த போது அமெரிக்கா அதிரடியாக வான் தாக்குதல் நடத்தி கொன்ற சம்பவம், உலக அரங்கை அதிர வைத்துள்ளது.

இதனால், அமெரிக்கா, ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காசிம் கொல்லப்பட்ட தினத்தில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. அது இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தொடர்ந்து 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்து வருகிறது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 9 காசுகள் அதிகரித்து 78 ரூபாய் 48 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து 72 ரூபாய் 39 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.

Exit mobile version