பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகளும், டீசல் லிட்டருக்கு 13 காசுகளும் உயர்ந்துள்ளன.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 74 ரூபாய் 41 காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 70 ரூபாய் 72 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

Exit mobile version