கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை

மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று அதிகளவாக மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல்100 ரூபாய் 19 காசுகள் விற்பனை செய்யப்பட்டுகிறது.

டீசல் விலை லிட்டருக்கு 92 ரூபாய் 17 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 95 ரூபாய் 51 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 89 ரூபாய் 65 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 94 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 84 ரூபாய் 89 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்பதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Exit mobile version