பெட்ரோல்,டீசல் விலை இன்று உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து, நாட்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குறைக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்றைய விலையில் பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் உயர்த்தப்பட்டு 71 ரூபாய் 7 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்து 65 ரூபாய் 70 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version