பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ற வகையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்து வருகின்றன. கடந்த மாதம் வரை தொடர்ந்து குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தநிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து 73 ரூபாய் 85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 69 ரூபாய் 41 காசுகளாகவும் விற்பனையாகிறது.

Exit mobile version