தொடர்ந்து அதிகாரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

கச்சா எண்ணைய் விலை உயர்வு எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. சவுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 77 ரூபாய் 6 காசுகளாக உள்ளது. டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 70 ரூபாய் 91 காசுகளுக்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் விலை 2 ரூபாய் 21 காசுகளும், டீசல் விலை 1 ரூபாய் 76 காசுகளும் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 69 செண்ட்கள் குறைந்து 58 டாலர் 15 செண்ட்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version