கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க, எண்ணெய் வள நாடுகள் முடிவு செய்துள்ளதால், இந்தியாவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலை, கடந்த சில வாரங்களில் 10 சதவீதம் அளவிற்கு குறைந்தது. இந்தநிலையில் எண்ணெய் வள நாடுகள், உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இந்தியாவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், இந்த விலை உயர்வு மத்திய மோடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.