தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலில் வரும் 5 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனிடையே, குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரி தமிழ்தேச பொதுவுடைமை கட்சித் தலைவர் மணியரசன் உள்ளிட்ட 3 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுமென தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், குடமுழக்கு விழா நடந்து முடிந்த பிறகு 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய இந்துசமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.