கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.

இந்தநிலையில், அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி மற்றும் முகக்கவசம் அணிவது குறித்து சச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.

அவரது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசின் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் நலப்பணிகளுக்கு எதிராக இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் செயல்படுதல், பேரிடர் மேலாண்மைச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version