உள்ளாட்சி தேர்தல் நடத்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் கோரி தமிழக தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பல காரணங்களால் தேர்தல் நடத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில், உச்சநீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அடுத்த 10 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், தமிழகத்தில் சில மாவட்டங்களில் நிலவி வரும் வறட்சி காரணமாக தேர்தலை நடத்த முடியாது என்றும், தேர்தலை நடத்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் என்றும் எழுத்து பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.