ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு இன்று தீர்ப்பு

ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கத்துறையின் மனு மீது, டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், கடந்த ஆகஸ்ட் 21 ம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, சிபிஐ காவல் நிறைவடைந்ததை அடுத்து, அவர், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, ப.சிதம்பரத்தை கைது செய்ய உத்தரவிட கோரி, அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

Exit mobile version