நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
நாங்குநேரி இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இதனிடையே, பணப்பட்டுவாடா நடப்பதாகக் கூறி இடைத்தேர்தலை ரத்து செய்ய சுயேட்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. தேர்தல் அறிவித்த பிறகு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.