ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பான மனு – உச்சநீதிமன்றம் மறுப்பு!

கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிப்பதை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனினும், ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதாக கூறி சில தனியார் பள்ளிகள் தொடர்ச்சியாக கல்வி கட்டணத்தை வசூலித்து வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பெற்றோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தற்போது தலையிட விரும்பவில்லை என்றும் மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது. இத்தகைய பிரச்சனைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும் என்பதால் இவற்றில் ஒரே மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கும் முன்பாக சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களை அணுக வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Exit mobile version