தீயில் சிக்கிய குடும்பத்தை காப்பாற்றிய 5 வயது சிறுவன்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தீயில் சிக்கிய குடியிருப்பில் இருந்து 5 வயது சிறுவன் செல்ல நாய் உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி ஹீரோவாக மாறியுள்ளான்.

ஜார்ஜியா மாகாணத்தின் பார்தோ கவுண்டியில்  உள்ள குடியிருப்பில், சிறுவன் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளான். சம்பவம் நடந்த அன்று  சிறுவனும் அவரது குடும்பத்தினரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அப்போது திடீரென்று தீ கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. ஏதோ உள்ளுணர்வு காரணமாக தூக்கத்திலிருந்து எழுந்த சிறுவன் தீ எரிவதைக் கண்டு அதிர்ந்துள்ளார்

உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர்  தன்னுடன் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது தங்கையையும், செல்ல நாயையும் எழுப்பி ஜன்னல் வழியாக வெளியே குதித்தார். இதில் சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

தொடர்ந்து தமது மாமா தூங்கும் அறைக்கு சென்று அவரை எழுப்பியுள்ளான். தீ பற்றி எரிவதைக் கண்ட அவரது மாமா மொத்த குடும்பத்தையும் தூக்கத்திலிருந்து எழுப்பி வெளியே அழைத்து வந்துள்ளார். சிறுவனது புத்திசாலிதனத்தினால் மொத்த குடும்பமும் தீயிலிருந்து தப்பியுள்ளனர்.

சிறுவன் நோவா இல்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை என கண் கலங்கியுள்ளார் சிறுவனின் தாத்தா டேவிட் உட்ஸ். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மருத்துவ உதவிக் குழுவினர், சிறுவன் நோவா உள்ளிட்ட 4 குடும்ப உறுப்பினர்களுக்கு முதலுதவி அளித்தனர். வெறும் 5 வயது சிறுவன், பயப்படாமல் தமது சகோதரியையும், செல்ல நாயையும் காப்பாற்றியதுடன், மொத்த குடும்பத்தையும் ஆபத்தில் இருந்து தப்ப வைத்துள்ளது.

தற்போது பார்தோ கவுண்டியில் பேசு பொருளாக மாறியுள்ளது. சிறுவன் நோவாவுக்கு அங்குள்ள தீயணைப்பு துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. ‘தீ விபத்தைக் கண்டு அஞ்சாமல் துரிதமாக செயல்பட்டு குடும்பத்தைக் காப்பாற்றிய சிறுவன் அப்பகுதி மக்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version