போலீசார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து விபரீத முயற்சி !

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த சித்ராவை கணவர் ரமேஷ், தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். கணவனைப் பிரிந்து வாழும் சித்ரா வரதட்சணையாக கொடுத்த 10 பவுன் நகை மற்றும் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இது குறித்து சித்ரா கடந்த ஓராண்டுக்கு முன்பு காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு செய்துள்ளார். புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சித்ரா அவரது தந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விடியா திமுக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

YouTube video player

Exit mobile version