ரெம்டெசிவர் மருந்தை சோதனை முறையில் பயன்படுத்த அனுமதி!!!

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நான்கு சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பிளாஸ்மா சிகிச்சை, ஹைட்ராக்சிகுளோரோகுயின், ரெம்டெசிவர், ஆன்டி வைரல் போன்ற சிகிச்சைகளை வழங்க பரிந்துரைத்துள்ளது. இதில் பிளாஸ்மா சிகிச்சைக்கு ராஜிவ் காந்தி மருத்துவமனை மற்றும், மதுரை ராஜாஜி மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது, ரெம்டெசிவர் சிகிச்சைக்கு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான சிகிச்சை துவங்க உள்ளது. அமெரிக்காவின் கிலியட் என்ற நிறுவனம் ரெம்டெசிவர் மருந்தை கண்டுபிடித்துள்ளது. ஒரு மருந்தின் விலை ஏழாயிரம் ரூபாயாக உள்ளது. இந்தியாவிற்கு ஆயிரம் மருந்துகள் மட்டுமே முதற்கட்டமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version