உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வீடுகளுக்கு நிபந்தனையின் பேரில் கள ஆய்வின்றி ஆவணங்கள் அடிப்படையில் இணையதளம் வாயிலாக அனுமதி வழங்கும் நடைமுறைக்கு தமிழக அரசு அரசாணை வழங்கியுள்ளது.
இந்த அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வெளியிட்டார். அதன் படி, கட்டிட அனுமதி, திட்ட அனுமதி வழங்கிட உள்ளாட்சியில் எடுத்துக் கொள்ளும் கால அளவை குறைத்திடும் வகையில் மத்திய மாதிரி கட்டிட விதிகள் 2016ன் படி, அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவுகள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் உள்ள மனை பிரிவுகள், உள்ளாட்சிகளால் அனுமதிக்கப்பட்ட மனைப்பிரிவுகள் போன்றவற்றிற்கு 2500 சதுர அடி பரப்பளவிற்கு மேற்படாத 1,500 சதுர அடி பரப்பளவில் கட்டப்படக் கூடிய கட்டிடங்களுக்கு மட்டும், கள ஆய்வின்றி எளிய முறையில் ஆவணங்கள் அடிப்படையில், இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.