ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஆயிரத்து 212 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக அரசு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தேர்தல் காரணமாக பணி நிரந்தர நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது தேர்தல் நிறைவடைந்ததால், கடந்த 2015-1016-ம் ஆண்டுகளில் எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர்.
நிரந்தர பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள ஒப்பந்த செவிலியர்கள் ஆயிரத்து 212 பேர், 10-ம் தேதிக்கு முன்னதாக சென்னையில் பணியில் சேர வேண்டும் எனவும், பின்னர் செவிலியர்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.