உலகையே பாதிக்கும் பிரச்சனை 'PermoFrost'

உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வரும் மிகப் பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது பெர்மாஃப்ராஸ்ட் ( PermoFrost ) பிரச்சனை. இந்த PermoFrost என்பது என்ன ?

நாம் அனைவரும் உடனடியாக கவனித்து கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம், உலகில் மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் PermoFrost. அறிவியல் உலகம் இதனை அச்சத்துடன் உற்று நோக்குகிறது. இப்போதைக்கு ரஷ்யா, சைபீரியா, கனடா போன்ற துருவப்பகுதிகள்தான் இதன் பாதிப்புகளை அதிகமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், எதிர்காலத்தில் இவை உலகின் மற்ற பகுதிகளிலும் ஆபத்தை விளைவிக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சரி, பெர்மோ ஃப்ராஸ்ட் பற்றி பார்ப்போம்…

நமது காவிரிச் சமவெளிகளில் இருப்பதைப் போலவே அந்த நிலப்பகுதியின் அடிப்பகுதியிலும் மீத்தேன் எரிவாயு இருக்கிறது. இவை துருவப்பகுதி நாடுகள் என்பதால், அந்த நிலப்பரப்பின் மேல்பகுதி உறைபனியில் மூடப்பட்டிருக்கிறது.

இந்த அமைப்பு இப்படியே இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், இப்போது புவி வெப்பமயமாதல் காரணமாக, அந்தப் பகுதியின் வெப்பநிலை பலமடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கனடாவில் உள்ள யூகான் நகரம், கடந்த 13 ஆயிரத்து 600 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வெப்பநிலை இருந்து வருகிறது. இதனால், நிலத்தின் அடிப்பகுதியிலிருந்து சல்பியூரிக் அமிலம் வெளியேறி, அந்தப் பகுதியில் உள்ள பாறைப்பகுதி உட்பட அனைத்தையும் அரித்துவிடுகிறது. இதுதான், பெர்மோ ஃப்ராஸ்ட் என்பது.

மீத்தேன் எரிவது என்பது, கார்பன் டை ஆக்சைடை விட நூறு மடங்கு அதிகமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். புவியின் வெப்பநிலையை பராமரிப்பதில் எப்போதும் துருவப்பகுதிகள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்தப்பகுதிகளின் வெப்பநிலை அதிகரிக்கும்போது வெடிக்கும் பெர்மோ ஃப்ராஸ்ட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதன் விளைவாக பூமியின் வெப்பநிலையும் தொடர்ந்து அதிகரிக்கும்.

இதைத்தாண்டிய அச்சுறுத்தல் ஒன்றையும் பெர்மோ ஃப்ராஸ்ட் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மீத்தேன் எரிவாயு வெடித்துச் சிதறும்போது, உறைபனியினால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மட்கிப்போகாமல் இருந்த விலங்குகளின் சடலங்கள் வெளியேறுகின்றன. அதிலிருந்து வரும் வைரஸ் மனிதர்களை பாதிக்கிறது.

இதைப்பற்றிய விழிப்புணர்வை உலகளாவிய அளவில் ஏற்படுத்துவதற்காக, பெர்மோ ஃப்ராஸ்ட் கூட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனுடைய மாநாடு சீனாவில் உள்ள லான்சூ (lanzhou) நகரில் 2020 ஜூன் மாதம் நடைபெறுகிறது. இதில் இனிவரும் நாட்களில், பெர்மோ ஃப்ராஸ்ட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவிருக்கிறது.

இயற்கையிடமிருந்து அபாயத்துக்கான ஒவ்வொரு எச்சரிக்கையும் எழுந்துகொண்டிருக்கிறது. அதற்கு, மனித சமூகம் சொல்லக்கூடிய பதிலில்தான், நம் எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.

Exit mobile version