தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்ட துணை முதலமைச்சர், கீழடி அகழாய்வு அரங்கில் வைக்கப்பட்டுள்ள பொருட்களையும் பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் புத்தக கண்காட்சி நடத்த பபாசி நிர்வாகத்திற்கு துணை முதலமைச்சர் 5 லட்சம் ரூபாய் வழங்கினார். அப்போது பேசிய அவர், இளம் எழுத்தாளர்கள் தங்கள் சிந்தனைகளை நாட்டு மக்களுக்கு கொடுக்கும் பணியை எந்த சூழ்நிலையிலும் நிறுத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தன்னைப் போன்றவர்கள் உயரிய நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம் என்று கூறினார். பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து புரிந்து கொண்டு பேச வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.