அடிமைச் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த மக்களை மீட்டெடுத்த தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாள்

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் விட்டுச் சென்ற கருத்துருவாக்கத்தில் எழுதப்பட்ட செய்தி தொகுப்பை காணலாம்….

ஒரு தீக்குச்சியை பட்டையில் உரசும்போது ஏற்படும் சுடரைப் போல், ஒருவரின் பேச்சு ஆதிக்க சக்திகளுக்கு எதிராக இன்றளவும் கொளுந்துவிட்டு எரிகிறது என்றால் பெரியார் என்ற சமூக சீர்திருத்த புரட்சியாளனின் புரட்சிகர கருத்தியலே ஆகும்.

1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாளன்று ஈரோட்டில் பிறந்த பெரியார், தமிழகத்தில் பெண் விடுதலை, சமூக நீதி, சமத்துவம் உள்ளிட்ட உயரிய சித்தாத்தங்களை சமூகத்தில் நிலைநாட்ட பெரிதும் பாடுபட்டார்.

“மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்று பெரியாரின் தத்துவம் அடிமை சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த மக்களை உடைத்தெரிய மேலெழுந்தது என்றால் மிகையல்ல.

 

வர்ணாசிரம கொள்கை மூலம் மனிதர்கள் அடிமைபடுத்தப்பட்டு, ஒரு குறிப்பிட்ட சமூக கட்டமைப்பிற்குள் சுருக்கிவிடப்பட்ட மனிதர்களை தனது சீரிய எழுத்துக்களாலும், பேச்சுக்களாலும் சமூக மாற்றத்தை கொண்டு வந்தவர் தந்தை பெரியார்.

நூற்றாண்டுகள் கடந்தாலும் இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் நின்று பேசும் ஒரு தலைவர்.

சமூக நீதிக்கு எதிராக பேசுவபவர்களை நின்றெதிர்க்கும் கருத்தியலை விதைத்தவர். சமூகம் என்பது மனிதர்களால் தான் உருவாக்கப்பட்டது.

ஒரு சமூகத்திற்காக மனிதன் அடிமைப் படக்கூடாது என்று மனிதர்களுக்கு விழிப்புணர்வை தனது வாழ்நாள் முழுவதும் ஊட்டி வந்த பெரியார், 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாளன்று காலமானார்.

 

சமூக நீதியற்ற தன்மைகளுக்கும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராகவும் செந்தடியாலும், வெண்தாடியாலும் தீண்டாமையை துரத்த பாடுபட்ட தந்தை பெரியாரின் கொள்கைகளை, என்றென்றும் நினைவுகூறுவோம்……

நியூஸ் ஜெ செய்திகளுக்காக சாக்லா…

 

 

Exit mobile version