மக்களின் ஆதரவு இரட்டை இலை சின்னத்திற்கு உள்ளது- ஜெயவர்தன்

கோவிலம்பாக்கம் ஊராட்சி, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்றும், கோவிலம்பாக்கம் மக்களின் ஆதரவு இரட்டை இலை சின்னத்திற்கு உள்ளதாகவும் தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் கூறியுள்ளார்.

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கோவிலம்பாக்கம் ஊராட்சியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழியெங்கும் பொதுமக்கள், தொண்டர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் ஆதரவு இரட்டை இலை சின்னத்திற்கு உள்ளதாகவும், கோவிலம்பாக்கம் ஊராட்சி, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்றும் கூறினார்.

Exit mobile version