போக்குவரத்து விதிமீறல்கள் ஈடுபடும் நபர்கள் மீது பொதுமக்களே நேரடியாக காவல்துறைக்கு புகார் அளிக்கும் வகையில் புதிய ஆப் முதன் முறையாக கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் புதிய ஆப் அறிமுகம் நடைபெற்றது. மாநகர காவல்துறை ஆணையாளர் சுமித்சரண் கலந்துகொண்டு புதிய ஆப்பை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், முன்பு இருந்ததை விட தற்போது குற்ற சம்பவங்கள் குறைந்து இருப்பதாகவும் கூறினார். தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய ஆப், பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post