நிறம் மாறுபவர்களுக்கு வாய்ப்பு தருவதை மக்கள் முடிவு செய்வார்கள்: தம்பிதுரை

மக்கள் தான் எஜமானர்கள் என்றும், நிறம் மாறுபவர்களுக்கு வாய்ப்பு தரவேண்டுமா? என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி அதிமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் கீதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, கரூர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி உறுதி என கூறினார். அரவக்குற்ச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றும், நிறம் மாறுபவர்களுக்கு வாய்பு தரவேண்டுமா? என்பது குறித்து அவர்கள் முடிவு செய்வார்கள் என தம்பிதுரை தெரிவித்தார்.

 

Exit mobile version