வாக்கு சேகரிக்க சென்ற அமமுக வேட்பாளரை திருப்பி அனுப்பிய மக்கள்

நிலக்கோட்டை அருகே வாக்கு சேகரிக்க சென்ற டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்கதுரையை ஊருக்குள்விடாமல் கிராம மக்கள் திருப்பி அனுப்பினர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தங்கதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள், நிலக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பங்கலாபட்டி, தெற்கு விராலிப்பட்டி மற்றும் நூத்துலாபுரம் ஆகிய கிராமங்களுக்கு வாக்கு சேகரிக்க சென்றனர். அப்போது, அங்கு வந்த வேட்பாளர் தங்கதுரையை ஊருக்குள் நுழையவிடாமல், எல்லையிலேயே கிராம மக்கள் திருப்பி அனுப்பினர். அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முன்வராமல், ஓட்டுகேட்பதற்கு மட்டும் ஊருக்குள் வருவதாக கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version